Monday, February 2, 2026
HomeCinemaMaine Pyar Kiya படத்தின் மனோஹரி பாடல் நாளை வெளியீடு

Maine Pyar Kiya படத்தின் மனோஹரி பாடல் நாளை வெளியீடு

கவின் நடித்த ஸ்டார் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் பதிந்தார் நடிகை ப்ரீத்தி முகுந்தன். அதைத்தொடர்ந்து இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் வெளியான `ஆச கூட’ வீடியோ பாடலில் நடித்து இருந்தார். இதன் மூலம் மிகப்பெரிய வைரலானார்.

சமீபத்தில் பான் இந்தியன் திரைப்படமாக உருவாகி வெளியான கண்ணப்பா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து நடிகை ப்ரீத்தி முகுந்தன் மலையாள சினிமாவில் களம் இறங்கியுள்ளார். மலையாளத்தில் மைனே பியார் கியா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான ஃபைசல் இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக ஹ்ரிது ஹருன் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் முரா, All We Imagine As Light போன்ற படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்களுடன் அஸ்கர் அலி, மிதுன், ஜெகதிஷ், முஸ்தஃபா, ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, ஜியொ பேபி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகிறது.

திரைப்படத்தின் பாடலான மனோஹரி லிரிக் வீடியோவை படக்குழு நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular