Monday, February 2, 2026
HomeSportsஓய்வு அறிவித்தலை ரத்து செய்த தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர்..!

ஓய்வு அறிவித்தலை ரத்து செய்த தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர்..!

தென்னாபிரிக்காவின் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் டேன் வான் நீகெர்க் (Dane van Niekerk) தனது ஓய்வு அறிவித்தலை ரத்து செய்துள்ளதாக இன்று சமூக ஊடகப் பதிவின் ஊடாக அறிவித்துள்ளார்.

முன்னதாக அவர் ஓய்வு நிலையை அறிவித்ததன் பின்னர், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

எனினும், இன்று முதல் செப்டம்பர் 1 ஆம் திகதி வரை டேர்பனில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னரான பயிற்சி முகாமிற்கான 20 பேர் கொண்ட குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட்டின் ஓய்வு நிலையிலிருந்து மீள்வது குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் தலைவர், கடந்த 2023 ஆம் ஆண்டு தனது 29 ஆவது வயதில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular