“பருத்தித்துறை நகரை மீட்போம்” : கவனயீர்ப்பு பேரணி முன்னெடுப்பு!

“பருத்தித்துறை நகரை மீட்போம்” எனும் தொனிப்பொருளில் பருத்தித்துறையில் இன்று கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கவனயீர்ப்பு பேரணி, பருத்தித்துறை துறைமுகத்தடியிலிருந்து ஆரம்பமாகி, வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடைந்தது.

இதன்போது, நீண்ட காலமாக முழுமையாக இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் பருத்தித்துறை அஞ்சல் அலுவலகம் விடுவிக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோசங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள், அரசியல்வாதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles