இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிருக்கான 2025 ஒருநாள் சர்வதேச உலகக்கிண்ண போட்டிக்கான அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
குறித்த அணிக்கான 15 வீராங்கனைகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், பாத்திமா சனா அணிக்குத் தலைமை வகிக்கவுள்ளார்.
அத்துடன், ஐமன் பாத்திமா, நடாலியா பர்வைஸ், ரமீன் ஷமிம், சதாஃப் ஷமாஸ், சாதியா இக்பால், ஷவால் சுல்பிகர், மற்றும் சையதா அரூப் ஷா உட்பட்ட முக்கிய வீராங்கனைகள், உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
