Monday, February 2, 2026
HomeMain NewsAmericaநவம்பரில் இந்தியா வர இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பயணத்தை ரத்து செய்ததாக தகவல்

நவம்பரில் இந்தியா வர இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பயணத்தை ரத்து செய்ததாக தகவல்

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க நவம்பரில் இந்தியா வர இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பயணத்தை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா-இந்தியா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் பிரச்சனையால் டிரம்ப் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் தொடர்ச்சியாக கூறிவரும் நிலையில் இந்தியா அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனிடையீ இந்தியா – அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டது. ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியாவிற்கு டிரம்ப் 50% வரிவிதித்தார்.

இந்நிலையில், ஷாங்காய் உச்சி மாட்டில் பங்கேற்பதற்காக 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா சென்ற நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இந்தியா பயணத்தை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular