Monday, February 2, 2026
HomeCinemaவிஷாலின் "மகுடம்" படத்தின் 3ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்..!

விஷாலின் “மகுடம்” படத்தின் 3ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்..!

விஷாலின் 35ஆவது படத்திற்கு மகுடம் என பெயரிடப்பட்டுள்ளத. இப்படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும்.

விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் மேலும் அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியிடப்பட்டு, பர்ஸ்ட் லுக் 27ஆம் தேதி வெளியானது. படப்பிடிப்பு விறுவிறுப்பான நடைபெற்ற நிலையில், முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் 3ஆம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களமாகும்.

விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் தொடர்பான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular