ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் முக்கோண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் கிடைக்கும் வருமானத்தை நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட தமது நாட்டின் மக்களுக்கு வழங்க ஆப்கானிஸ்தான் அணி உறுதியளித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளுக்கிடையிலான முக்கோண இருபதுக்கு இருபது தொடர் ஓகஸ்ட் 29 ஆம் திகதி ஆரம்பமானது.
இந்த தொடரில் கிடைக்கும் வருமானத்தையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவுள்ளதாக ஆப்கானிஸ்தான் அணி குறிப்பிட்டுள்ளது.
