அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நண்பரான சார்லி கிர்க் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் உட்டாவில் கல்லூரி நிகழ்வு ஒன்றின்போது இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க கொன்ஸ்சவேட்டிவ் கட்சியின் தீவிர ஆதரவாளரான அவர், அமெரிக்காவில் வெளிப்புற விவாதங்களை நடத்துவதில் ஜனாதிபதி ட்ரம்பின் செல்வாக்கு மிக்க நண்பராக அறியப்பட்டவராவார்.
இந்தநிலையில் “பெறுமதிமிக்க மற்றும் புகழ்பெற்ற சார்லி கிர்க் இறந்துவிட்டார்” என்று ட்ரம்ப் தமது சமூக ஊடகப்பதிவில் எழுதியுள்ளார்.
அமெரிக்க இளைஞர்களின் இதயங்களை சார்லியை தவிர வேறு யாரும் புரிந்து கொள்ளவில்லை அல்லது கொண்டிருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது, துப்பாக்கிதாரி கட்டிடம் ஒன்றின் கூரை மீதிருந்தே தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
