Monday, February 2, 2026
HomeCinemaஇட்லி கடை : இன்று மாலை நடக்கும் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

இட்லி கடை : இன்று மாலை நடக்கும் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் ராஜ்கிரன் சிவனேசனாக நடிப்பதாகவும் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது.

‘இட்லி கடை’ படத்தில் கயல் என்ற கதாப்பாத்திரத்தில் நித்யா மேனனும், நடிகை ஷாலினி பாண்டே மீரா என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர் என்பதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இட்லி கடையில் நடிக்கும் தனுஷின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தனுஷ், முருகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular