Monday, February 2, 2026
HomeSportsமுதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா

முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று இந்திய அணி அசத்தியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம்- ஓமன் அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஓமன் அணி 18.4 ஓவரில் 130 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் ஓமன் அணி தொடரில் இருந்து வெளியேறியது. இதன்மூலம், குரூப் A சுற்றில் உள்ள இந்திய அணி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று +4.793 நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சூப்பர் 4 வாய்ப்பை இழந்த ஓமன் அணியுடன் வரும் 19ம் தேதி இந்தியா மோதுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular