Monday, February 2, 2026
HomeMain NewsAmericaபாக்ராம் விமான தள கட்டுப்பாட்டை திருப்பித் தர வேண்டும்: ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பாக்ராம் விமான தள கட்டுப்பாட்டை திருப்பித் தர வேண்டும்: ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்ததையடுத்து ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர்.

இதையடுத்து அமெரிக்காவிற்கும் தாலிபானுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அந்த விமானப்படை தளம் சீனாவுக்கு அருகில் இருப்பதால் அங்கு படைகளை குவிக்க விரும்புகிறார். ஆனால் அதற்கு தாலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தாலிபான்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் “விரைவில்” திருப்பித் தர வேண்டும். அந்த விமான தளத்தை அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விஷயங்கள் நடக்கும்” என்றார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular