Monday, February 2, 2026
HomeCinemaகேரள திரைப்பட விருதுகள்- தேர்வுக்குழு தலைவராக பிரகாஷ் ராஜ் நியமனம்

கேரள திரைப்பட விருதுகள்- தேர்வுக்குழு தலைவராக பிரகாஷ் ராஜ் நியமனம்

கேரள அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படம் மற்றும் திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், 2024ம் ஆண்டிற்கான 53வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், சிறந்த நடிகராக மம்முட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக வின்சி அலோஷியஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சிறந்த குணச்சித்திர நடிகர், நடிகை, ஸ்பெஷல் ஜூரி விருது (நடிப்பு, இயக்கம்), பிரபலமான மற்றும் அழகியல் மதிப்பு கொண்ட சிறந்த திடைப்படம், சிறந்த குழந்தைகள் திரைப்படம், சிறைந் கதை எழுத்தாளர், சிறந்த திரைக்கதை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர், பாடகி, சிறந்த படக்தொகுப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விரைவில் நடைபெறவுள்ள 2024ம் ஆண்டின் கேரள மாநில திரைப்பட விருதுகளுக்கான நடுவர் குழுவின் தலைவராக நடிகரும் இயக்குநருமான பிரகாஷ் ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே நடுவர் குழுவில் ரஞ்சன் பிரமோத், ஜிபு ஜேக்கப், பாக்யலட்சுமி, காயத்ரி அசோகன், நிதின் லூகாஸ் மற்றும் சந்தோஷ் எச்சிக்கானம் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், தலைவராக பிரகாஷ் ராஜ் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular