Monday, February 2, 2026
HomeSportsமகளிர் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

மகளிர் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

கொழும்புவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நாட் ஸ்கைவர் நிலைத்து ஆடி சதமடித்து அசத்தி 117 ரன்கள் எடுத்தார். டாமி பியூமண்ட் 32 ரன்கள் எடுத்தார் .

இலங்கை அணியில் இனோகா ரணவீர 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் .

இதையடுத்து, 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. இங்கிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது. அதிகபட்சமாக ஹசினி பெராரா 35 ரன்னும், ஹர்ஷிதா சமரவிக்ரமா 33 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், இலங்கை 45.4 ஓவரில் 164 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 89 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சார்பில் சோபி எகிள்ஸ்டோன் 4 விக்கெட்டும், நாட் சீவர் பிரண்ட், சார்லொட் டீன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular