Monday, February 2, 2026
HomeCinemaபூஜா ஹெக்டே பிறந்தநாள்- கதாப்பாத்திர பெயரை வெளியிட்டு வாழ்த்திய ஜனநாயகன் படக்குழு

பூஜா ஹெக்டே பிறந்தநாள்- கதாப்பாத்திர பெயரை வெளியிட்டு வாழ்த்திய ஜனநாயகன் படக்குழு

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜன நாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் இதுவாகும்.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் ஜனநாயக்ன் படத்தில் கேமியோ ரோலில் ஒரு காட்சியில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

முன்னதாக ஜனநாயகன் திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆன்ந்த் நடித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜனநாயகன் படத்தில் நடிக்கும் அவரது கதாப்பாத்திர பெயரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

அதன்படி, ‘ஜனநாயகன்’ படத்தில் கயல் என்ற கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதுதொடர்பாக படக்குழு சிறப்புப் போஸ்டரை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular