Monday, February 2, 2026
HomeMain NewsAmericaரஷியாவுக்கு டிரம்ப் மிரட்டல்

ரஷியாவுக்கு டிரம்ப் மிரட்டல்

உக்ரைனில் நடக்கும் போர் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், உக்ரைனுக்கு நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்ப நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷியாவை எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “பாருங்கள், இந்தப் போர் தீர்க்கப்படாவிட்டால், நான் உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்புவேன். டோமாஹாக் ஒரு அற்புதமான ஆயுதம், ரஷ்யா நிச்சயமாக இதை விரும்பவில்லை” என்று கூறினார்.

டிரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்த முன்னாள் ரஷிய அதிபரும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ், “உக்ரைனுக்கு டோமாஹாக்ஸ் வழங்கப்பட்டால், அது அனைவருக்கும், குறிப்பாக டிரம்பிற்கு ஒரு பிரச்சனையாக இருக்கும். இது ரஷ்யாவிற்கு அருகில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புவது போன்ற மற்றொரு வெற்று அச்சுறுத்தலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

2,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் டோமாஹாக் ஏவுகணை மூலம் உக்ரைன் ரஷிய தலைநகர் மாஸ்கோவை எளிதில் தாக்க முடியும். இந்த ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதி வேண்டி அமெரிக்காவிடம் உக்ரைன் கோரிக்கை வைத்துள்ள நிலையில் டிரம்ப் உடைய கருத்து வந்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular