Monday, February 2, 2026
HomeMain NewsSri Lanka100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல் , சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று மற்றும் பலத்த மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular