Monday, February 2, 2026
HomeSportsமாபெரும் சாதனை படைத்த அலானா கிங்

மாபெரும் சாதனை படைத்த அலானா கிங்

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா , இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.

இதில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் தஹிலா மெக்ராத் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலிய வீராங்கனை அலானா கிங்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட் ஆனது.

வெறும் 24 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்கா 97 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

அந்த அணியில் அதிகபட்சமாக லாரா வால்வார்ட் 31 ரன்கள் அடித்தார்.
ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்துவீசி அலானா கிங் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை வரலாற்றில் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற மாபெரும் சாதனையை அலானா கிங் படைத்துள்ளார்.

பின்னர் 98 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 16.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் அபாரா வெற்றி பெற்றது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular