Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaஇலங்கையில் மலசலகூட வசதி அற்ற 13,326 குடும்பங்கள்!

இலங்கையில் மலசலகூட வசதி அற்ற 13,326 குடும்பங்கள்!

இலங்கையில் 13,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் மலசலகூடங்களுக்கு பதிலாக காடுகள் மற்றும் கடற்கரைகள் போன்ற திறந்தவெளிகளை பயன்படுத்துவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு அறிக்கையின் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி நாட்டில் சுமார் 13,326 குடும்பங்கள் மலசலகூட வசதியின்றி வாழ்ந்து வருகின்றன.

அத்துடன் 92.2 வீதமான குடும்பங்கள் தனிப்பட்ட கழிப்பறைகளை பயன்படுத்துவதாகவும், 5.8 வீதமான குடும்பங்கள் ஏனைய குடும்பங்களுடன் கழிப்பறை வசதிகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 0.2% குடும்பங்கள் பொதுக் கழிப்பறைகளை நம்பியுள்ளதுடன், 0.2% குடும்பங்கள் திறந்த வெளி இடங்களைப் பயன்படுத்துகின்றன.

மேலும் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் குடும்பங்களின் அதிகபட்ச எண்ணிக்கையை கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பில் சுமார் 4,518 குடும்பங்கள் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular