Monday, February 2, 2026
HomeCinemaஆணாக மாறினால் எப்படியிருக்கும் – வரலட்சுமி சரத்குமார்

ஆணாக மாறினால் எப்படியிருக்கும் – வரலட்சுமி சரத்குமார்

நாளுக்கு நாள் பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கண்டிக்கும் விதமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய முயற்சியை கையாண்டுள்ளார்.

பெண்கள் ஆண்களைப் போல நடந்துகொண்டால் எப்படி இருக்கும் என்பது தொடர்பில் அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் ஆண்களைப் போல் உடையணிந்து, அவர்கள் பெண்களிடம் பொதுவாகச் செய்யும் அநாகரிகச் செயல்களை, அவர் ஆண்களிடம் செய்வது போலச் சித்தரித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கோவையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அதற்கு எதிர்வினையாற்றும் வகையிலும், சமூகம் சிந்திப்பதற்காகவும் இந்தப் பதிவை வரலட்சுமி வெளியிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular