Monday, February 2, 2026
HomeCinema'ஆரோமலே' படக்குழுவை பாராட்டிய சிவகார்த்திகேயன்

‘ஆரோமலே’ படக்குழுவை பாராட்டிய சிவகார்த்திகேயன்

‘முதல் நீ முடிவும் நீ’ படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படத்தை தொடர்ந்து சிங்க், தருணம் ஆகிய படங்களில் கிஷன் தாஸ் நடித்துள்ளார்.

இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான ‘டிராகன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள ‘டயங்கரம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.

கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து ‘ஆரோமலே’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாரங் தியாகு இயக்க சித்து குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தை முன்னணி நடிகரான சிவகார்த்திக்கேயன் பார்த்துள்ளார். படம் பார்த்தபின், படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular