Monday, February 2, 2026
HomeMain NewsAmericaஅமெரிக்கா செல்ல ஆசையா? இதைக் கவனியுங்கள்! கிரீன் அட்டை சட்டத்தில் புதிய மாற்றம்

அமெரிக்கா செல்ல ஆசையா? இதைக் கவனியுங்கள்! கிரீன் அட்டை சட்டத்தில் புதிய மாற்றம்

அமெரிக்கர்களை திருமணம் செய்தாலும், கிரீன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று ட்ரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பலர் கல்வி மற்றும் தொழில் ஆகியவற்றுக்காக பல்வேறு விசாக்களில் செல்கின்றனர்.

அவர்களில் பெருமளவானோர் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காக கிரீன் அட்டைகளுக்கு விண்ணப்பிப்பதாக கூறப்படுகிறது.

இந்த கிரீன் அட்டை ஒரு வெளிநாட்டவர், அமெரிக்காவில் நிரந்தரமாக வாழவும், தொழில் செய்யவும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது.

அதில் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பெண் அல்லது ஆண் ஒருவரை திருமணம் செய்து கொள்பவர்கள், எளிதாக கிரீன் அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் தற்போது முறைகேடான முறையில், கிரீன் அட்டையைப் பெற்றுக்கொள்ள பலர் திருமணம் செய்து கொள்வதாக பல முறைப்பாடுகள் எழுந்தன.

இந்தநிலையில் குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் தற்போது கிரீன் அட்டைகளுக்கு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

அதன்படி அமெரிக்கக் குடிமகனைத் திருமணம் செய்து கொள்வது மாத்திரமே கிரீன் அட்டைக்கான உத்தரவாதம் அல்ல என்று அமெரிக்க குடிவரவு துறை அறிவித்துள்ளது.

அதற்கமைய, கணவன், மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றால், அவர்களின் கிரீன் அட்டை விண்ணப்பத்துக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular