முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை (05) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் டிசம்பர் 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த போது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொலிஸாரிடமிருந்து தலைமறைவாக இருந்ததால் அவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று காலை முன்னிலையாகியதையடுத்து அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
