கரவெட்டி பகுதியில் நேற்று புதன்கிழமை நள்ளிரவு 21 பவுண் நகை திருடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
நெல்லியடி – கொடிகாம வீதியில் உள்ள கரவெட்டி மத்தி கோவிற்சந்தை பகுதியில் இந்தத துணிகர திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இருந்த மூவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைப் பயன்படுத்தி வீட்டை உடைத்த கொள்ளையர்கள் அங்கிருந்த 21 பவுண் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
