Monday, February 2, 2026
HomeMain Newsஅரியாலையில் மோட்டார் சைக்கிளுடன் ரயில் மோதி விபத்து; இளைஞர் படுகாயம்

அரியாலையில் மோட்டார் சைக்கிளுடன் ரயில் மோதி விபத்து; இளைஞர் படுகாயம்

யாழ்ப்பாணம் – அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் இன்றையதினம் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நாவந்துறையை சேர்ந்த 23 வயது இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்தவர் பூம்புகாரில் உள்ள தனது சகோதரின் வீட்டுக்கு சென்ற வேளையிலே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாதுகாப்பற்ற ரயில் கடவையால் கடந்தகாலங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் பதிவானதாகவும், உரிய பாதுகாப்பு கடவை அமைக்ககோரி மக்கள் பல முறை போராட்டம் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular