Monday, February 2, 2026
HomeMain News150 ஆண்டுகளுக்கு பின்னர் மகாராணியை காண இருக்கும் ஸ்பெய்ன்!

150 ஆண்டுகளுக்கு பின்னர் மகாராணியை காண இருக்கும் ஸ்பெய்ன்!

ஐரோப்பிய யூனியனில் அங்​கம் வகிக்​கும் ஸ்பெ​ய்ன், சுமார் 150 ஆண்​டு​களுக்​குப் பிறகு தனது முதல் மகா​ராணி​யைக் காண இருக்​கிறது. தற்​போதைய மன்​னர் ஆறாம் பிலிப் மற்​றும் ராணி லெட்​டிசி​யா​வின் மூத்த மகளான 20 வயது இளவரசி லியோனர், ஸ்பெ​யினின் அடுத்த வாரி​சாக அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளார்.

இதன்​மூலம் 1800களில் ஆட்சி செய்த இரண்​டாம் இசபெல்​லா​வுக்​குப் பிறகு லியோனர் ஸ்பெய்னின் மகா​ராணி​யா​வார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

18ஆம் நூற்​றாண்​டின் தொடக்​கத்​தில் இருந்​து, ஸ்பெய்னின் மகுடம் ‘ஹவுஸ் ஆஃப் போர்​பன்’ (House of Bourbon) வம்​சத்​தின் வசம் உள்​ளது. பிரான்​சிஸ்கோ பிராங்​கோ​வின் சர்​வா​தி​கார ஆட்​சிக்​குப் பிறகு, 1975இல் முதலாம் ஜுவான் கார்​லோஸ் தலை​மை​யில் முடி​யாட்சி மீண்​டும் நிலை​நாட்​டப்​பட்​டது.

அவர் 2014இல் தனது மகன் ஆறாம் பிலிப்​புக்​காக தனது பதவியைத் துறந்​தார். மன்​னர் பிலிப் 2004இல் பத்​திரி​கை​யாள​ரான லெட்​டிசி​யா​வைத் திரு​மணம் செய்​தார். இவர்​களுக்கு லியோனர் உட்பட இரு மகள்​கள் உள்​ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular