Tuesday, February 3, 2026
HomeMain Newsபொங்குதமிழ் நினைவு நிகழ்வு இன்று!

பொங்குதமிழ் நினைவு நிகழ்வு இன்று!

ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட பொங்கு தமிழ் நிகழ்வின் நினைவு இன்று யாழ்.பல்கலையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இந்த நிகழ்வு 2001 இல் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது. அதன்போது, தமிழ்த் தேசியம், தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம் போன்ற மூன்று வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன.

அந்த வகையில் இந்த பொங்குதமிழ் நிகழ்வானது வருடாவருடம் அனுஷ்க்கப்படுவது வழமை.

அதன்படி இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ். பல்கலைக்கழக பொங்குதமிழ் தூபியில், பொங்குதமிழ் நிகழ்வை அனுஷ்டிக்க அனைத்து மாணவர்களும், பொதுமக்களும் உணர்வோடு அணி திரளவேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular