Monday, February 2, 2026
HomeMain Newsஇந்த அரசின் காலத்திலேயே காணி விடுவிப்பு சாத்தியம்! ஜனாதிபதியிடம் கூறினார் விகாராதிபதி

இந்த அரசின் காலத்திலேயே காணி விடுவிப்பு சாத்தியம்! ஜனாதிபதியிடம் கூறினார் விகாராதிபதி

இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுப்புக்கள் சாத்தியம் என்பதால் காணிகளை விடுவிக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியுள்ளதாக நயினாதீவு நாக தீப விகாராதிபதி தெரிவித்தார்.

நயினாதீவுக்கு நேற்று முன்தினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நாக தீப விகாராதிபதியை சந்தித்து, கலந்துரையாடியமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

தையிட்டி விகாரை பிரச்னை தீர்க்கப்படவேண்டும். அந்த விகாரையை சுற்றியுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கவேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளை அவர்களிடமே கையளிக்கவேண்டும்.

காணி கையளிப்புக்கள் இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே சாத்தியமாகும். எனவே உங்கள் காலத்தில் காணிகளை கையளியுங்கள் என ஜனாதிபதியிடம் கூறினேன்-என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular