Monday, February 2, 2026
HomeMain Newsவீட்டு திட்ட கொடுப்பனவு கோரி யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்பு!

வீட்டு திட்ட கொடுப்பனவு கோரி யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்பு!

முன்னர் நடைமுறைப்படுத்திய வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “தற்போதைய ஆளுநர் யாழ். மாவட்ட செயலராக பணியாற்றிய 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் இன்றுவரை வழங்கப்படவில்லை. இதனால், நாம் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகிறோம். மழைகாலத்தில் இருக்க இடமின்றி அந்தரப்படுகிறோம்.

எனவே, முன்னைய வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காமல் புதிய வீட்டு திட்டங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. இது எமக்கு மிக மனவேதனையை தருகிறது. எமது பிரச்னைக்கு உடன் தீர்வு தருமாறு கோரியே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்”, என்று தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular