Monday, February 2, 2026
HomeMain Newsமுல்லைத்தீவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உதவிக் கல்விப் பணிப்பாளர் பலி!

முல்லைத்தீவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உதவிக் கல்விப் பணிப்பாளர் பலி!

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான உதவிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளார்

மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழையகொலணி பகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கிய சமயம் அவ் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி ஒருவர் உட்பட 5 மாணவர்களை குளவிகள் கொட்டியுள்ளது.

குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்த முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அன்ரனி ஜோர்ஜ் (வயது 53) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குளவிக்கொட்டுத் தாக்குதலுக்குள்ளான 5 பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS) தரம் II அதிகாரியான இவர் தனது மகனை பாடசாலையிலிருந்து அழைத்து வருகையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular