Monday, February 2, 2026
HomeMain Newsகிவுல் ஓயா திட்டத்துக்கு - எதிரான போராட்டத்தில் சகலரும் திரளவேண்டும் - தமிழ் அரசு...

கிவுல் ஓயா திட்டத்துக்கு – எதிரான போராட்டத்தில் சகலரும் திரளவேண்டும் – தமிழ் அரசு கட்சி அழைப்பு

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து பங்கேற்க வேண்டும் என்று இலங்கை தமிழ் அரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எம். ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.

“கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான மாபெரும் போராட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறும். இதில் சகல மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறோம். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இந்தப் போராட்டத்துக்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவதோடு பங்களிப்பையும் தொடர்ச்சியாக வழங்குவோம்.”- என்றார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular