இந்தியப் பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து இதுவரை சுமார் 80 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் அறிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈரானுக்குச் சொந்தமான போர்க்கப்பல் ஒன்று எதிர்பாராத விதமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் விபத்துக்குள்ளானது.
விபத்தைத் தொடர்ந்து கப்பல் கடலில் மூழ்கிய நிலையில், அதில் பயணித்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

