800 லீற்றர் டீஸலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று புதன்கிழமை அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏழாலையைச் சேர்ந்த இருவரும் அதிகளவான டீஸலை கூடிய விலையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அவர்களிடமிருந்து 800 லீற்றர் டீஸல், டீஸலை பதுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட கொள்கலன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

