சிறுமிக்கு பாலியல் தொல்லை: பிக்குவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

யாழ்ப்பாணம் – நாவற்குழி விகாரையில் தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட பௌத்த பிக்குவை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அண்மையில் வீட்டுப் பாவனைக்காக விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். இதன்போது, அங்கு நின்ற பௌத்த பிக்கு ஒருவர் அச்சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை புரியும் நோக்கில் அநாகரிகமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு இன்றையதினம் (03) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேக நபரை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles