இஸ்ரேல் – லெபனான் தூதுக் குழுக்கள் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ தலைமையில் மூடிய அறையில் பேச்சை ஆரம்பித்துள்ளன.
பல தசாப்த ஆண்டுகளுக்கு பின்னர் இஸ்ரேல் – லெபனான் பிரதிநிதிகள் நேரடியாக பேச்சை ஆரம்பித்துள்ளன. வோஷிங்டனில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சில் சற்று முன்னர் இந்தப் பேச்சு ஆரம்பமானது.
இந்தப் பேச்சில் மார்கோ ரூபியோ இஸ்ரேல் தூதுவர் யேச்சில் லீடர், லெபனான் தூதுவர் நாடா ஹமதே மோவாட் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சு குறித்து அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பிய போதிலும், அவர்கள் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கவில்லை.
