இலங்கை வந்தடைந்தார் இந்திய துணை ஜனாதிபதி

Two men in formal dress walk a red carpet during a ceremonial welcome, flanked by traditional dancers and guards, with a large airplane in the background on the tarmac.

Two men in suits shake hands on a red carpet at an airport, in front of a white passenger plane with red accents, while crew members look on.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உட்பட அவருடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று (19) காலை 9.30 மணியவில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

நாளை (20) வரை நாட்டில் தங்கியிருந்து, இப்பயணத்தின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதோடு, அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுடன் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்பட உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles