பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வந்த நண்பியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுவன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் நம்கும் என்ற பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 15 வயதான சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளார். இந்தக் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களின் வயதுகள் தெரிய வராதபோதிலும் அவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்றும் அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,
பாதிக்கப்பட்ட சிறுமி தனது நண்பனின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுள்ளார். அங்கு நண்பனுடன் 4 பேர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மது அருந்தியிருந்தனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில்இ மது போதையிலிருந்த நான்கு பேரும் சேர்ந்து அந்தச் சிறுமியைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமி உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்றும் அவர்களின் இந்தக் கொடூர செயல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிய வருகிறது.
