உ.பி.யின் மிர்சாபூர் மாவட்டம், திராமண்ட் கஞ்ச் பள்ளத்தாக்கில் இருந்து லசோடா நோக்கி இறங்கும் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை இரவு பல வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
இது மிகவும் துயரமான மற்றும் நெஞ்சை உலுக்கும் விபத்து என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிர்சாபூர் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன்.
துயருற்ற குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று கூறியுள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
