மெக்சிகோவில் இன்று இடம்பெற்ற இன்று துப்பாக்கிச் சூட்டில் 32 வயதான கனேடிய பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.
மெக்சிகோவில் உள்ள ஒரு வரலாற்று தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவராலேயே கனேடிய பெண்மணி கொல்லப்பட்டுள்ளார், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கி சூடு நடத்தியவர் தானும் தற்கொலை செய்துகொண்டார்.
நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான தொன்மையான டியோடிஹூவாகான் வளாகத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெக்சிகோ அதிபர் கிளோடியா ஷெயின்பாம், தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
இது மெக்சிகோ நகரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்ட முதல் போட்டிக்கு இன்னும் ஏழு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்தில் துப்பாக்கி, கூர்மையான ஆயுதம் மற்றும் ரவைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் மேம்பாடுகளை கவனித்து வருவதாகவும், கனடிய தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் மென்சிக்கோ அதிபர் ஷெயின்பாம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை விசாரிக்கவும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தனது பாதுகாப்பு அமைச்சரவை உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
