உரும்பிராயில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று விட்டு தந்தையும் தனையனும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளனர்.

இதன்போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் உரும்பிராய் சந்தியிலுள்ள மின் கம்பத்துடன் மோதியதில் இருவரும் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் ஏழாலை கிழக்கைச் சேர்ந்த பரமேஸ்வரன் (வயது 64) ப.கஜதீபன் (வயது 23) ஆகிய இருவரும் பலியாகினர்.

இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles