தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை

தமிழகத்தில் நாளை வியாழக்கிழமை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்பு பணிகளுக்காக 1 கோடியே 47 இலட்சம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 5 கோடியே 73 இலட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்கள் வாக்களிப்பதற்காக தமிழக மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்களிப்பு நிலையங்களாக அடையாளங் காணப்பட்டுள்ள இடங்களில் துபபாக்கி ஏந்திய துணை இராணுவப்படையினரும் தமிழ்நாடு சிறப்பு பொலிஸ் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

வாக்களிப்பு தினமான நாளை மாநிலம் முழுவதும் விசேட அதிரடிப்படை வீரர்கள் 514 வாகனங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

ஏதாவது ஒரு பகுதியில் பிரச்சினைகள் அல்லது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக நிலைமையை சீர் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles