30 பள்ளி குழந்தைகளை காப்பாற்ற பாம்புடன் போராடி உயிர் நீத்த நாய்!

தெரு​நாய் ஒன்று விஷ பாம்​புடன் போராடி பள்​ளிக் குழந்​தைகளை காப்​பாற்​றி உயிர்நீத்த சம்​பவம் நேற்று ஒடி​சா​வில் நடை​பெற்​றுள்​ளது.

முன்பள்ளி குழந்​தைகளை காப்​பாற்ற விஷ பாம்​புடன் போராடி உயிர்​நீத்த தெரு நாய்க்கு கிராம மக்​கள் அஞ்​சலி செலுத்தி அடக்​கம் செய்​தனர்.

தெரு நாய்​கள் தொல்லை அதி​கரித்து வரு​வ​தாக ஊடகங்​களில் அடிக்​கடி செய்தி வரு​கின்​றன. தெரு நாய்​களை கட்​டுப்​படுத்த அரசு நடவடிக்கை மேற்​கொண்​டால், விலங்கு நல ஆர்​வலர்​கள் எதிர்ப்பு தெரிவிக்​கின்​றனர். இப்​பிரச்​சினை நாடு முழு​வதும் உள்​ளது.

இந்​நிலை​யில் தெரு​நாய் ஒன்று விஷ பாம்​புடன் போராடி பள்​ளிக் குழந்​தைகளை காப்​பாற்​றிய சம்​பவம் ஒடி​சா​வில் நடை​பெற்​றுள்​ளது.

அங்​குள்ள மயூர்​பன்ச் மாவட்​டத்​தில், ரகுலா என்ற கிராமம் உள்​ளது. இங்​குள்ள ஆரம்ப பாடசாலையில் 30 குழந்​தைகள் படிக்​கின்​றனர். இந்​நிலை​யில் பள்ளி வளாகம் அருகே விஷ பாம்பு ஒன்று வந்​தது.

இதை பார்த்​ததும் அந்த தெரு​வில் உள்ள காளி என்ற நாய் குரைத்து அதனுடன் சண்​டை​யிட்​டது. இதனால் அந்த பாம்பு சீற்​றத்​துடன் நாயை பலமுறை கொத்​தி​யது. முகத்​தி​லும், வாயிலும் பாம்பு கொத்​தி​யதை​யும் பொருட்​படுத்​தாமல் காளி முழு மூச்​சுடன் சண்​டை​யிட்டு பாம்பை கடித்து கொன்​றது.

ஆனால் பாம்​பின் விஷம் உடலில் ஏறிய​தால், சிறிது நேரத்​தில் காளி மயங்கி விழுந்து இறந்​தது. இச்​சம்​பவம் ரகுலா கிராம மக்​களை சோகத்​தில் ஆழ்த்​தி​யது. வீரத்​துடன் போராடி தங்​களின் குழந்​தைகளை காப்​பாற்​றிய காளிக்கு கிராம மக்​கள் வெள்​ளைத் துணி போர்த்​தி, மலர் மாலைகளால் அலங்​கரித்து அஞ்​சலி செலுத்​தினர். இச்​சம்​பவம்​ சமூக ஊடகங்​களில்​ வேக​மாக பரவி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles