சுதந்திர வர்த்தக விதிகளை அமெரிக்கா மட்டும் தீர்மானிக்க முடியாது – மார்க் கார்னி

சுதந்திர வர்த்தகத்திற்கான நிபந்தனைகளை அமெரிக்கா மட்டுமே தன்னிச்சையாக விதிக்க முடியாது என கனடா பிரதமர் மார்க் கார்னி, தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – கனடா – மெக்சிகோ இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசிய வர்த்தக ரீதியான சிக்கல்கள் இருதரப்பிலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடா தனது எதிர் முன்மொழிவுகi ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அண்மையில் அமெரிக்கா வெளியிட்ட பட்டியலில், கனடாவில் அமெரிக்க மதுபான விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள், பால் பொருட்கள் விநியோகம் மற்றும் பிளாஸ்டிக் கழிவு குறைப்பு திட்டங்கள் ஆகியவை வர்த்தகத் தடையாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

மேலும், கனடாவின் சில மாகாணங்களில் நிலவும் கொள்முதல் விதிகள் அமெரிக்க நிறுவனங்களைப் பாதிப்பதாகவும் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் குற்றம் சாட்டியுள்ளார்.

வாஷிங்டனில் நடைபெற்ற செனட் கமிட்டி கூட்டத்தில், அமெரிக்க வர்த்தகச் செயலாளர் லட்னிக் மற்றும் செனட்டர் ஜீன் ஷாஹீன் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

அமெரிக்காவின் கடுமையான போக்கினால் கனடிய சுற்றுலாப் பயணிகள் வருகை 30 வீதம் குறைந்துள்ளதாக ஷாஹீன் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த லட்னிக், ‘அமெரிக்க மதுபானங்களைக் கனடா கடைகளில் வைக்க மறுப்பது அமெரிக்காவை அவமதிக்கும் செயல்’ என்று சாடினார். இந்தச் சிக்கல்களைக் கையாள பிரதமர் மார்க் கார்னி புதிய ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles