டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், தனது சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்காக, அவர் மீது விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையை இன்று செலுத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த அபராதத் தொகையை நஜிப்பின் பிரதிநிதி ஒருவர் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று செலுத்துவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான நஜிப்பிற்கு, கடந்த செப்டம்பர் 18 அன்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கினார். இதன் மூலம், அவர் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை ஆகஸ்ட் 23, 2028 வரை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
73 வயதான நஜிப், ‘எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்’ (SRC International Sdn Bhd) நிறுவனத்திற்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளில், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் 2020 ஜூலை 28 அன்று குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்தது.
