
தொண்டமானாறு செல்வச் சந்நிதியான் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா கொடியேற்றம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் பெருமளவு பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சிறப்பாக இடம்பெற்றது.
கொடியேற்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
திருவிழாவிற்கு வருகை தரும் அடியவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சுகாதாரம், குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வல்வெட்டித்துறை நகர சபை ஏற்பாடு செய்துள்ளதுடன், விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெருந்திருவிழாவின் தேர் திருவிழா எதிர்வரும் 27ஆம் திகதியும், தீர்த்தத் திருவிழா 28ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன
