3 கோடி ரூபா போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைதானார்

மார் மூன்றரை கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவரை மாதம்பே போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து சுமார் 216,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

கற்பிட்டி, நுரைச்சோலையிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறிகளை ஏற்றி வந்த லொறி ஒன்றில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மரக்கறி ஏற்றிச் சென்ற பல வாகனங்களை மறித்துச் சோதனை செய்த போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின்படி, இந்தப் போதை மாத்திரைகள் இந்தியாவிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி வரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles