சீமானுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் மாட்டு வண்டில் ஊர்வலம்

Group of men standing with fists raised in front of an ornate temple entrance with gold carvings behind them.

Man in a white shirt carries wooden planks in front of a large red political banner featuring a portrait of a Tamil leader and raised fist imagery.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் மாட்டு வண்டில் ஊர்வலம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையிலான வேட்பாளர்கள் வெற்றிபெறவேண்டும் என அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மானிப்பாயில் மாட்டுவண்டில் ஊர்வலம் இடம்பெற்றது.

இதன்போது செந்தமிழன் சீமானின் உருவப்படம் கட்சி சின்னமும் தாங்கிய பதாகை காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் ஏர் கலப்பையையும் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.

மானிப்பாய் பிரதேச சபை முன்றலில் ஆரம்பமான ஊர்வலம் மருதடி பிள்ளையார் ஆலயம் வரை சென்று அங்கிருந்து மீண்டும் பிரதேச சபை முன்றிலை அடைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles