1,100 மின் சிகரெட்டுகளை சிங்கப்பூருக்கு கடத்தியவருக்கு சிறை

மலேசியாவைச் சேர்ந்த தனியார் வாடகை கார் ஓட்டுநர் ஒருவருக்கு, தனது பயணி ஒருவரின் மூலம் மாதம் 10,000 ரிங்கிட் வரை சம்பாதிக்கக்கூடிய ஒரு வேலையைப் பற்றித் தெரியவந்தது.

ஆனால், அது அவரது சொந்த நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மின்சிகரெட்டுகளைக் கடத்தும் வேலையாகும்.

இருந்தபோதிலும், சுந்தரதாசன் கண்ணதாசன் இந்த வேலையை ஏற்றுக்கொண்டார். இரண்டு முறை மின்சிகரெட் தொடர்பான இந்தச் சாதனங்களைக் கடத்தியதன் மூலம் அவர் 2,000 ரிங்கிட் சம்பாதித்தார்.

அவர் மூன்றாவது முறையாக கடத்தியபோது பிடிபட்டார்.

கடந்த ஜனவரி மாதம் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் அவரது வாகனத்தின் பின்புறப் பகுதியைச் சோதனையிட்டபோது, மொத்தம் 23,000 டொலர் மதிப்புடைய 1,100 மின்சிகரெட்டுகளைக் கண்டுபிடித்தனர்.

இந்தச் சட்டவிரோதப் பொருள்களை நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, 31 வயது சுந்தரதாசனுக்கு புதன்கிழமையன்று 14 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles