தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

தந்தை செல்வாவின் 49ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஆயர் சு.ஜெபநேசன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

முதலில் சதுக்கத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், அவரின் சமாதியிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவருக்கான அஞ்சலிகளை செலுத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles