இடைநிலைப்பள்ளி மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்துக்குள் இருக்கும் 5 மீற்றர் ஆழமுள்ள கால்வாய்க்குள் விழுந்து காயத்துடன் மீட்கப்பட்டார்.
இன்று காலை 9,12 மணிக்கு ஆசிரியர்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும், சம்பவ இடமான Wakaf மதப்பள்ளிக்கு விரைந்ததாக தும்பாட் மாவட்ட மீட்பு ஆணையர் தெரிவித்தார்.
பள்ளி வளாகத்தில் உள்ள கால்வாயை மெல்லிய கொங்கிரீட் தகடுகளால் மூடப்பட்டிருந்தாலும் அதன் மீது அமர்ந்திருந்த 17 வயது மாணவன் குழிக்குள் விழுந்ததாகத் தெரிய வந்துள்ளது.
குழிக்குள் சிக்கியிருந்த 17 வயது மாணவரை 40 நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் சுவாசக் காற்று இல்லாத குழாய் என்பதால் மாணவர் சிகிச்சைக்காகத் தும்பார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 17 வயது மாணவரின் தாயார் பள்ளிக் கூடத்தில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என தெரிவித்துள்ளார். சம்மந்தப்பட்ட பள்ளிக்கூடம் கால்வாயை மெல்லிய தகடுகளால் மூடியது இச்சம்பவத்திற்கு முக்கிய காரணமாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
