அர்ச்சுனா எம்.பி. மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைத்துப்பாக்கியை காட்டி தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தார் என ஒரு தரப்பினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்

பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினருக்கும், மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மற்றைய தரப்பினரை மிரட்டி இருந்தார்.

இது தொடர்பில் மற்றைய தரப்பினர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மற்றைய தரப்பைச் சேர்ந்த பெண்ணொருவரும் நாளையய தினம் புதன்கிழமை வரை மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles